இந்தியா – சீனா எல்லை விவகாரம்: அமெரிக்கா மீதான சீனாவின் கோபம்; இந்தியாவின் நிலைப்பாடு என்ன?


  • அனந்த் பிரகாஷ்
  • பிபிசி நிருபர்

இந்தியா - சீனா எல்லை விவகாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியா – சீனா எல்லை விவகாரம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் இருவர், இந்தியா-சீனா இடையிலான லடாக் நிலை குறித்து அறிக்கைகளை வெளியிட்டனர். சீனா அதை எதிர்த்தது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றம் சாட்டியது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதையும், இந்தியா இதை எப்படிப் பார்க்கிறது என்பதையும் இந்தக் கட்டுரையில் கொஞ்சம் விளக்கமாகப் புரிந்து கொள்வோம்.

நடந்தது என்ன?

கடந்த புதன்கிழமை, அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் கமாண்டிங் ஜெனரல் சார்லஸ் ஏ ஃப்ளின், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், லடாக்கில் சீனாவின் செயல்பாடு குறித்து அறிக்கை அளித்தார்.

இந்த அறிக்கையில், “சீனா மேற்கு பகுதியில் உருவாக்கியுள்ள உள்கட்டமைப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது” என்று ஃப்ளின் குறிப்பிட்டார்.Source link

Leave a Reply

Your email address will not be published.