குழந்தையை கடித்துக் கொன்ற நாய்கள்? உசிலம்பட்டி சாலையோரம் காணப்பட்ட கொடுமை


குழந்தை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்திரிப்புப் படம்.

(இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (17/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

உசிலம்பட்டியில் சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை நாய்கள் கடித்து குதறி கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், தேனி ரோட்டில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே ரத்தக்கறையுடன் கிடந்த துணியை நாய்கள் கடித்து குதறின. இதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த உசிலம்பட்டி டவுன் போலீசார் ரத்தக் கறையுடன் கிடந்த துணியை பிரித்து பார்த்தனர். அதில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் நாய்கள் கடித்துக் குதறியதில், சிதைந்த நிலையில் இருந்தது.Source link

Leave a Reply

Your email address will not be published.