திருச்சி முகாமில் இலங்கை தமிழர்கள் தொடர் போராட்டம் – பின்னணி என்ன?


  • ஜோ. மகேஸ்வரன்
  • பிபிசி தமிழ்

சிறப்பு முகாமில் போராட்டம்

பட மூலாதாரம், Fernando

தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், தங்களை விடுதலை செய்யக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அடிக்கடி போராட்டம் நடப்பது ஏன்? இது குறித்து அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?

தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். இதன்படி, இலங்கைத் தமிழர்கள் 104 பேர் மற்றும் நைஜீரியா, பல்கேரியா, வங்கதேசம், இந்தோனீசியா உட்பட வெளி நாட்டினர் என மொத்தம் 145 பேர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்பட்டும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். சிறப்பு முகாமிற்குள் சமைத்து உண்ணும் வசதி, செல்போன் பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்டவை அனுமதிக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர்களுக்கு தினசரி உணவுப் படியும் வழங்கப்படுகிறது.

குறிப்பாக, சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி கடவுச் சீட்டு முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் உள்ளனர்.Source link

Leave a Reply

Your email address will not be published.