லண்டன் ஆயாக்கள் இல்லம்: பிரிட்டிஷ் வரலாற்றில் மறக்கப்பட்ட இந்திய ஆயாக்களை நினைவுகூறும் புதிய முயற்சி


  • ககன் சபர்வால்
  • தெற்காசிய புலம்பெயர்ந்தோர் செய்தியாளர், பிபிசி நியூஸ்

ஆயாக்கள் இல்லம்

பட மூலாதாரம், British Library

படக்குறிப்பு,

நூற்றுக்கண்கான ஆயாக்களின் புகலிடமாக ஆயாக்கள் இல்லம் இருந்தது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் செல்வாக்குடனும் செழிப்பாகவும் இருந்த காலகட்டத்தில், குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் ந்தியாவில் இருந்தும் ஆசியாவின் பிற பகுதிகளில் இருந்தும் அழைத்து வரப்பட்டார்கள்.

பிற்காலத்தில் இவர்கள் கைவிடப்பட்டு, தங்களுடையே தேவைகளை தாங்களே பார்த்துக் கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்கள் தங்கியிருந்த ஒரு கட்டிடம் ‘ப்ளூ ப்ளேக்’ என்ற நீல நிறப் பட்டயம் மூலம் பெருமைப்படுத்தப்பட உள்ளது.

லண்டனில் உள்ள வரலாற்றில் முக்கியமானவர்களுடன் தொடர்புடைய கட்டிடங்களுக்கு மரியாதை அளிக்கும் ஒரு தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் திட்டம்தான் ப்ளூ ப்ளேக்.

மகாத்மா காந்தி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பல தலைவர்களுக்கு இந்த ப்ளூ ப்ளேக் மூலம் மரியாதை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் உளவாளியாகச் செயல்பட்ட நூர் இனாயத் கான் 2020-ஆம் ஆண்டில் ப்ளூ பிளேக் மூலம் பெருமைப்படுத்தப்பட்டார்.Source link

Leave a Reply

Your email address will not be published.