அதிமுக கூட்டத்தில் இரண்டு அணிகள் மோதல்: நிர்வாகிக்கு ரத்தக்காயம் – நடந்தது என்ன?


அதிமுக தலைமை அலுவலகம்
படக்குறிப்பு,

அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜூன் 14ம் தேதி) நடைபெற்றது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி, அண்மையில் பாஜக குறித்து கருத்து தெரிவித்த, முன்னாள் அமைச்சர் பொன்னையன், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒற்றைத் தலைமை குறித்து முழக்கம் எழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அதற்கடுத்த 4 நாட்களும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் ஆதரவு திரட்டி வருகின்றன அதிமுகவின் இரண்டு அணிகளும்.

அதிமுகவை பொறுத்தவரை யார் அந்த ஒற்றைத் தலைமை என்பது தான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி. அதற்கான பதிலை, பேசித் தீர்க்க சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்றைய தீர்மானக் கூட்டம் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என இரண்டு தரப்புமே தனித்தனியாக தங்களுக்கான ஆதரவைத் திரட்ட முயன்று கொண்டிருந்த நிலையில், இன்று, சனிக்கிழமை காலை 10 மணியளவில் தன் ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் ஓபிஎஸ், நட்சத்திர விடுதி ஒன்றில் ஆலோசனை நடத்துகிறார் என்று தகவல்கள் வெளியாயின.Source link

Leave a Reply

Your email address will not be published.