ஆன்லைன் ரம்மி உங்களை அடிமைப்படுத்துவது எப்படி? உண்மையிலேயே பணம் சம்பாதிக்க முடியுமா? – நிபுணரின் விளக்கம்


  • ஹேமா ராக்கேஷ்
  • பிபிசி தமிழுக்காக

ஆன்லைன் ரம்மி

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடந்த 10 மாதங்களில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஓர் இளம்பெண் கூட தற்கொலை செய்து கொண்டதாக நாம் செய்திகளில் பார்த்தோம். இந்நிலையில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து அவசர சட்டம் பிறப்பிக்கும் வகையில் அரசுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் சிறப்புக் குழு ஒன்றையும் தமிழக அரசு சமீபத்தில் நியமனம் செய்துள்ளது.

ஆன்லைன் ரம்மி எப்படி இயங்குகிறது? விளம்பரங்களில் காண்பிப்பது போல நிஜமாகவே ஆன்லைன் ரம்மி மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியுமா? பணத்தை இழந்தாலும் எது மக்களை மீண்டும் மீண்டும் விளையாடத் தூண்டுகிறது? இதற்கு என்ன தீர்வு என்பது பற்றி சர்வதேச மின்னணு வர்த்தக சபையால் அங்கீகரிக்கப்பட்ட சைபர் வல்லுநர் ஹரிஹரசுதன் பிபிசி தமிழுக்காக பகிர்ந்து கொண்ட தகவல்களைப் பார்க்கலாம்.

ஆன்லைன் ரம்மி எப்படி வடிவமைக்கப்படுகிறது?

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கேமிங் துறையில் (Gaming Industry) சந்தை மதிப்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு 360 மில்லியன் சந்தை மதிப்பு கொண்டிருந்த இந்தத் துறை இந்த வருட முடிவுக்குள் 510 மில்லியனை தொடும் என்கிறது KMPG ஆய்வு முடிவுகள்.Source link

Leave a Reply

Your email address will not be published.