ஆர்க்டிக் ஸ்குவா: துருவப் பகுதியில் மட்டுமே காணப்படும் அரியவகைப் பறவை தமிழ்நாட்டுக்கு வந்தது எப்படி?


  • க. சுபகுணம்
  • பிபிசி தமிழ்

ஆர்டிக் ஸ்குவா பறவை

பட மூலாதாரம், RAVEENDRAN NATARAJAN

படக்குறிப்பு,

ஆர்டிக் ஸ்குவா பறவை, தமிழ்நாடு அமைந்திருக்கும் கிழக்குக் கடல் பகுதியில் இதுவரை காணப்பட்டதில்லை

பூமியின் துருவப் பகுதிகளான ஆர்க்டிக் மற்றும் அன்டார்டிகா பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஆர்க்டிக் ஸ்குவா என்ற பறவை முதல்முறையாக தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடாவில் அமைந்திருக்கும் தனுஷ்கோடியில் காணப்பட்டுள்ளது.

கடல் சார் உயிரினங்கள், பறவையினங்கள் உட்பட சிறந்த பல்லுயிரிய வளம் மிக்க கடல் பகுதியாக மன்னார் வளைகுடா உள்ளது. இந்தப் பகுதியில் ஜூன் 15-ஆம் தேதியன்று துருவப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஆர்க்டிக் ஸ்குவா என்ற பறவை காணப்பட்டுள்ளது.

இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை, மன்னார் வளைகுடா பகுதியில் வாழக்கூடிய மற்றும் அங்கு வலசை வரக்கூடிய பறவைகளைப் பற்றிய ஆய்வுகளை 2015-ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைத்து, பறவைகள் கணக்கெடுப்புப் பணியைச் செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு பறவைகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இறகுகள் அறக்கட்டளையின் நிறுவனர் இரவீந்திரன் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பறவை ஆய்வாளர் பைஜூ ஆகியோர், அரிய வகை பறவையான “ஆர்க்டிக் ஸ்குவா” என்ற கடற்காகம் இனத்தைச் சேர்ந்த பறவையைக் கண்டனர்.Source link

Leave a Reply

Your email address will not be published.