கக்கன் பிறந்தநாள்: தமிழக அரசியல் களத்தில் அவரின் பங்களிப்பு என்ன?


  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

கக்கன் தோளில் கை போட்டபடி காமராஜர்
படக்குறிப்பு,

கக்கன் தோளில் கை போட்டபடி காமராஜர்

இந்திய அரசியல் அமைப்பு அவையின் உறுப்பினர், கோயில் நுழைவுப் போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சியின் தலைவர், முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என சேவையாற்றிய பூ. கக்கனின் பிறந்த நாள் இன்று. தமிழக அரசியல் களத்தில் கக்கனின் பங்களிப்பு என்ன?

அரசியலில் பல பதவிகளை வகித்தாலும், எளிமையாகவே வாழ்ந்து மறைந்த தலைவர்களில் கக்கனும் ஒருவர்.

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தும்பைப் பட்டி கிராமத்தில் பூசாரிக் கக்கன் – குப்பி தம்பதிக்கு 1909ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி முதலாவது மகனாகப் பிறந்தார் கக்கன். இவருடன் பிறந்தவர்கள் ஐந்து பேர்.

பள்ளிக் கல்வியை மேலூர் தொடக்கப்பள்ளி, திருமங்கலம் பி.கே.என். நாடார் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் படித்த அவர், எஸ்.எஸ்.எல்.சிக்குப் பிறகு படிப்பைத் தொடரவில்லை. இதற்குப் பிறகு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும் சுதந்திரப் போராட்ட வீரரும் காங்கிரஸ் தலைவருமான அ. வைத்தியநாதரின் அறிமுகம் கக்கனுக்குக் கிடைத்தது.Source link

Leave a Reply

Your email address will not be published.