தந்தையர் தினம்: தாயை இழந்த தன் மகளுக்கு, தானே தாயாக மாறிய தந்தை

தந்தையர் தினம்: தாயை இழந்த தன் மகளுக்கு, தானே தாயாக மாறிய தந்தை
புதுச்சேரியை சேர்ந்த இளங்கோவன், கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர்.
அவருக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரது 47 வயதில் உயிரிழந்தார். இவர்களுடைய மகள் கிருத்திகா சரியாக 18வயது நடக்கும் நேரத்தில் தாயை இழந்தார். தாயாரின் மறைவுக்குப் பிறகு மகள் கிருத்திகாவைத் தனி ஆளாக இருந்து தந்தை இளங்கோவன் பார்த்துள்ளார்.
தாய் இல்லாத குறையைத் தனது மகள் உணர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாகத் தந்தை இளங்கோவன் மகளுக்குத் தந்தை மட்டுமில்லாமல் ஒரு தாயாகவும் இருந்து மகள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.
தயாரிப்பு: எம் மணிகண்டன், நடராஜன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: