நாய்களால் கடித்துக் குதறப்பட்ட பச்சிளம் குழந்தை: தொட்டில் குழந்தை திட்டம் என்ன ஆனது?


  • சே.பிரசன்னா வெங்கடேஷ்
  • பிபிசி தமிழுக்காக

தொட்டில் குழந்தை திட்டம் என்ன ஆனது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மாதிரி படம்

  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தொட்டில் குழந்தை திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படாமல் முடங்கியுள்ளதால் பச்சிளம் குழந்தைகள் வீதிகள் வீசப்படும் அவலங்கள் தொடர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
  • சிசு கொலைகள் நடைபெறாத வண்ணம், உசிலம்பட்டிக்கு பல்நோக்கு துறையினர் இணைந்து சிறப்புக் கவனம் செலுத்தி உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்கிறார் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்.

தொட்டில் குழந்தை திட்டம் பச்சிளம் குழந்தைகள் கைவிடப்படக் கூடாது என்ற நோக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது. 1992ஆம் ஆண்டு முதன்முறையாக சேலத்தில் இதை அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. தமிழகம் முழுவதும் பெற்றோரால் கைவிடப்பட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் காப்பகங்களில் சேர்க்கப்பட்டு, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சட்டப்படி தத்துக் கொடுக்கப்பட்டன.

தற்போதைய சூழலில் இந்த உயரிய திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தொட்டில் குழந்தை திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படுவதில்லை என்பது சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரும் பொதுவான விளக்கம். அண்மையில் உசிலம்பட்டியில் பச்சிளம் குழந்தையின் உடல் நாய்களால் கடித்துக் குதறப்பட்டு கோரமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2013 முதல் 2020ஆம் ஆண்டு வரை 52 குழந்தைகள் குப்பையிலும் தெரு ஓரங்களிலும் மீட்கப்பட்டன. இவற்றில் நான்கு குழந்தைகள் நாய்களும் எலிகளும் கடித்து பரிதாபமாக உயிரிழந்தன. ஒருவேளை தொட்டில் குழந்தை திட்டம் நடைமுறையில் இருந்திருந்தால் குழந்தைகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் திட்டம் மீண்டும் முழுவீச்சில் நடைமுறைக்கு வரப்படவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். பச்சிளம் குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டுமெனில் முக்கிய இடங்களில் அரசின் தொட்டில்கள் ஆட வேண்டும். கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது பெரும்பாலோரின் கோரிக்கையாக உள்ளது.

“தொட்டில் குழந்தை திட்டத்தைத் தற்போது செயல்படுத்துவதற்கு முதலில் சம்பந்தப்பட்ட துறையில் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,” என்கிறார் குழந்தைகள் நல குழுமத்தின் முன்னாள் உறுப்பினர் முகமது.Source link

Leave a Reply

Your email address will not be published.