முஸ்லிம்களை லத்தியால் தாக்கும் உ.பி போலீஸ் – இந்தியாவை உலுக்கிய வைரல் காணொளி


  • ரஜினி வைத்தியநாதன் & தில்நவாஸ் பாஷா
  • பிபிசி நியூஸ்

காவல்துறை தாக்கும் காணொளியில் இருக்கும் சிலரை அடையாளம் கண்டு பிபிசி அவர்களின் குடும்பத்தினரோடு பேசியுள்ளது
படக்குறிப்பு,

போலீஸார் தாக்கும் காணொளியில் இடம்பெற்றவர்களில் சிலரை அடையாளம் கண்டு பிபிசி அவர்களின் குடும்பத்தினரோடு பேசியுள்ளது

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் போலீஸ் காவலில் இருக்கும் இஸ்லாமியர்கள் சிலரை காவல்துறையினர் லத்தியால் கடுமையாகத் தாக்கும் காணொளி ஒன்று லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகியிருக்கிறது. அதை அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பகிர்ந்து, அந்தக் கொடூரமான செயலை, அந்த ஆண்களுக்கு வழங்கப்பட்ட “பரிசு” என்று பாராட்டினார்.

“இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தாக்குதலுக்கு உள்ளானவர்களின் குடும்பத்தினர், அவர்கள் அப்பாவிகள் என்றும் அவர்களை விடுவிக்க வேண்டும்,” என்றும் கூறுகின்றனர்.

“அவர் என் தம்பி. அவரை தொடர்ந்து கடுமையாக அடிக்கிறார்கள், அவர் வலியால் கத்துகிறார்,” என்று ஸெபா, தனது தம்பி சயீஃபின் வேதனையான காணொளியை தன் கையிலிருக்கும் கைபேசியில் பார்த்தபடி கண்ணீருடன் உடைந்து, கைகள் நடுங்கக் கூறினார்.

உத்தர பிரதேச நகரமான சஹாரன்பூரில் உள்ள தனது வீட்டில் உறவினர்கள் ஆறுதல் கூறியபடி அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு இடையே உட்கார்ந்திருந்த ஸெபா, “என்னால் இதைப் பார்க்கக்கூட முடியவில்லை. அவர் மிகவும் மோசமாகத் தாக்கப்படுகிறார்,” என்று கூறுகிறார்.Source link

Leave a Reply

Your email address will not be published.