இந்தியாவிலிருந்து வாங்கப்படும் கோதுகையை வேறு யாருக்கும் விற்கத் தடை – யுஏஇ அறிக்கையில் என்ன இருக்கிறது?


கோதுமை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவிலிருந்து வாங்கப்படும் கோதுமையை அடுத்த நான்கு மாதங்களுக்கு வேறு யாருக்கும் விற்கப்போவதில்லை என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) புதன்கிழமை முடிவு செய்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதார விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையின்படி, இந்தத் தடை 2022 மே 13 முதல் நடைமுறைக்கு வரும். இந்திய கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் மாவு மற்றும் இதர பொருட்களுக்கும் இந்தத் தடை பொருந்தும்.

தற்போதைய சர்வதேச சூழ்நிலையே இந்த முடிவுக்குக் காரணம் என்று அந்த நாடு குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், துபாய் அல்லது அபுதாபி, இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட கோதுமையை மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்வதை இந்தியா விரும்பவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

மேலும், “துபாய் அல்லது அபுதாபிக்கு ஏற்றுமதி செய்த தானியங்கள் அல்லது கோதுமையை வேறு எந்த நாட்டிற்கும் வழங்குவதை இந்தியா விரும்பவில்லை. அதை உள்நாட்டிலேயே பயன்படுத்த வேண்டும் என்றும் இந்த நன்மைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரியும் இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் சென்றடைய வேண்டும் என்றும் இந்தியா விரும்புகிறது,” என்று ஒரு முக்கிய தகவல் அறிந்த வட்டாரத்தை மேற்கோள் காட்டி இந்த செய்தி தெரிவிக்கிறது.Source link

Leave a Reply

Your email address will not be published.