இந்தியாவில் முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்திற்கு அடித்தளமிட்ட குத்புதீன் ஐபக் – அடிமையாக இருந்தவர் அரசரானது எப்படி?


  • மிர்ஸா ஏபி பெய்க்
  • பிபிசி உருது, டெல்லி

குத்புதீன் ஐபக்

(உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை ‘வரலாற்றுப் பதிவுகள்’ என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 45வது கட்டுரை இது.)

இது ஏறக்குறைய 825 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. சுல்தான் மொய்சுதீன் (ஷாஹாபுதீன்) கோரி, ஆப்கானிஸ்தானில் தனது தலைநகரம் கஜினியில் அரசவையை அலங்கரித்த காலம். அப்போது அவர் தனது ஆலோசகர்கள் கூறும் அறிவுரைகளுக்குச் செவி மடுப்பார்.

இதேபோன்ற ஒரு பாரம்பரிய அரசவைக் கூட்டம் நடந்தது. அங்கு கூடியிருந்த அனைவரும் பல்வேறு நிகழ்ச்சிகள், நகைச்சுவை துணுக்குகள் மற்றும் வசனங்கள், கவிதைகள் மற்றும் கஜல்களால் சக்கரவர்த்தியை மகிழ்வித்தனர். பதிலுக்கு அவர்களுக்கு வெகுமதியும் மரியாதையும் வழங்கப்பட்டது.

அன்றிரவு சுல்தான் கோரி, தனது அரசவையினருக்கும் அடிமைகளுக்கும் (பணியாட்கள்) பரிசுகள், விலையுயர்ந்த ரத்தினக் கற்கள், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவற்றை அளித்தார். அவர்களில் ஒரு அடிமை( பணியாள்) அரசவைக்கு வெளியே வந்த பிறகு, துருக்கியர்கள், காவலர்கள், சுத்தம் செய்யும் வேலை செய்பவர்கள், அடிமைகள் மற்றும் குறைந்த அந்தஸ்துள்ள பிற தொழிலாளர்களுக்குத் தனது வெகுமதியை அளித்துவிட்டார்.Source link

Leave a Reply

Your email address will not be published.