காபூல் சீக்கியர் குருத்வாராவில் தாக்குதல்: “நாங்கள் இங்கே பாதுகாப்பாக இல்லை”


  • செகந்தர் கெர்மானி
  • பிபிசி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் செய்தியாளர்

ஆப்கானிஸ்தான் சீக்கிய குருத்வாரா
படக்குறிப்பு,

தாக்குதலில் தீக்கிரையான மின்விசிறி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத் தலம் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

சீக்கிய குருத்வாரா மற்றும் அந்த சமூக உறுப்பினர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு செல்லும் வளாகத்தின் கோட்டை கதவுகளுக்கு வெளியே ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த நபர்கள் அங்கிருந்த பாதுகாவலரை கொன்றுள்ளனர்.

உள்ளே வரும்போது அவர்கள் கையெறி குண்டுகளுடன் நுழைந்தனர், அதே நேரத்தில் அருகே உள்ள சோதனைச் சாவடிகளில் இருந்த தாலிபன் உறுப்பினர்கள் ஆயுததாரிகளைப் பின்தொடர்ந்து விரைந்தனர்.

“என் வீடு குருத்வாராவிற்கு முன்னால் உள்ளது, துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் நான் ஜன்னல் வழியாக பார்த்தேன், தாக்குல்தாரிகள் உள்ளே இருப்பதாக மக்கள் கூறினார்கள்” என்று குல்ஜித் சிங் கல்சா பிபிசியிடம் கூறினார்.Source link

Leave a Reply

Your email address will not be published.