மேகேதாட்டு: “காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட விட மாட்டோம்” – தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்


மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், M K Stalin official facebook page

(இன்றைய நாளில் இலங்கை, இந்தியாவில் உள்ள ஊடகங்கள், இணையதங்கள் வெளிவந்த முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட விடமாட்டோம், காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு தொடர்ந்து போராடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அதுகுறித்த செய்தியின்படி, மேகேதாட்டு அணை திட்டம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் கூறியிருப்பது சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ள முதல்வர், இது தொடர்பாக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் குழு விரைவில் டெல்லி செல்லும் என்றும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “காவிரிப் பிரச்னை, தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை. காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்பதில், திமுக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும். தமிழகத்தின் உரிமையை நிச்சயம் நிலைநாட்டுவோம்.Source link

Leave a Reply

Your email address will not be published.