அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்குமா? தீவிரமாகிறது ஓபிஎஸ், இபிஎஸ் ‘தலைமை சர்ச்சை’


  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக

அதிமுக தற்கொலை

பட மூலாதாரம், @AIADMKOfficial

அ.தி.மு.க பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ‘பொதுக்குழு கூட்டத்தை நிறுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. ஓ.பி.எஸ் கூறுவதுபோல சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பதற்கு விதிகளில் இடமில்லை’ என்கின்றனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர். என்ன நடக்கிறது அதிமுகவின் இந்த இரு தலைவர்களின் முகாம்களில்?

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வரும் 23ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமையாக அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு எதிராக, கடந்த ஒரு வாரமாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பினர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் தொண்டர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.

இதையடுத்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தம்பிதுரை உள்ளிட்டோர் இரண்டு தரப்பிடமும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இதில், ஓ.பி.எஸ் தரப்பினர் தங்கள் நிலையை தெளிவாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இருவர் இடையே நடக்கும் சமாதான பேச்சுவார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் எதுவும் இதுவரையில் எட்டப்படவில்லை.Source link

Leave a Reply

Your email address will not be published.