ஆங்கிலத்தில் 35. கணிதத்தில் 36 மார்க் மட்டுமே எடுத்தவர் கலெக்டர் ஆன கதை


  • பார்கவ் பாரிக்
  • பிபிசி குஜராத்திக்காக

துஷார் சுமேரா

பட மூலாதாரம், Tushar Sumera/FB

படக்குறிப்பு,

துஷார் சுமேரா

ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36. என் 10 ஆம் வகுப்பில் நான் எடுத்த மதிப்பெண்கள் இவ்வளவுதான். கல்லூரி சேர்க்கைக்காக படிவம் நிரப்பும்போது, என் சொந்தப் பெயரை எழுதுவதில் கூட பிழை செய்தேன். ஆனால், உறுதியான நம்பிக்கையும் கடின உழைப்பும் என்னை ஐஏஎஸ் ஆக்கின.

குஜராத் மாநிலம் பரூச் மாவட்ட ஆட்சியர் துஷார் சுமேராவின் வார்த்தைகள் இவை. இவரைப் பொறுத்தவரை உங்கள் மதிப்பெண்களுக்கும் வாழ்க்கையின் வெற்றிக்கும் ஒருபோதும் தொடர்பில்லை.

அண்மையில் இவரது 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வைரலானது. பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மிகக்குறைவாக இருந்த நிலையிலும் தற்போது மாவட்ட ஆட்சியராக உயர்ந்திருக்கும் இவரது மதிப்பெண் சான்றிதழ், மிகுந்த ஊக்கமளிக்கும் செய்தியாக பார்க்கப்பட்டு பகிரப்பட்டது. யார் இவர்?

குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியிலுள்ள சோட்டிலா கிராமத்தைச் சேர்ந்த தல்பத்பாய் – கௌரிபென் இணையரின் மூத்த மகன் துஷார் சுமேரா. இவரது தாய் கௌரிபென் பள்ளி ஆசிரியராக இருந்தவர். ஆசிரியரின் மகனாக இருந்தபோதும் பள்ளிகாலத்தில் துஷார் ஒரு சராசரி மாணவன் தான்.Source link

Leave a Reply

Your email address will not be published.