“கலை அனைவருக்குமானது” – பழங்குடி குழந்தைகளுக்கு பரதம் கற்றுத் தரும் அமெரிக்கப் பெண்


கௌசல்யா ஸ்ரீனிவாசன்.
படக்குறிப்பு,

கௌசல்யா ஸ்ரீனிவாசன்.

தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ பாரம்பர்ய நடனத்தை பழங்குடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியை அமெரிக்காவில் இருந்து வந்து செயல்படுத்தி வருகிறார் நாட்டியக் கலைஞர் கௌசல்யா ஸ்ரீனிவாசன்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருக்கும் தாய் தமிழ்ப் பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் பயிலும் இருளர் சமூக மாணவிகளுக்கு இந்த பரத நாட்டிய வகுப்பு நடத்தப்படுகிறது. இதுவரை பழங்குடி தாளத்துக்கு ஆடிக்கொண்டிருந்த குழந்தைகள், இங்கு பரத ஜதிக்கு ஆடுகிறார்கள்.

“சமூகத்தின் பின்தங்கிய இடத்தில் இருக்கும் இந்த மக்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இப்படியே இருப்பார்கள். அவர்களும் படிக்க வேண்டும் கலைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சொல்லிக் கொடுக்க நாம் முனைந்தால் அவர்கள் கற்றுக் கொள்வார்கள். பத்து பேரில் இரண்டு பேர் இதைக் கற்றுக்கொண்டு முன்னேறினால் அதுவே எனக்குப் பெரிய வெற்றிதான்” என்று பெருமிதம் பொங்க நம்மோடு பேசினார் கௌசல்யா சீனிவாசன்.Source link

Leave a Reply

Your email address will not be published.