விற்பனைக்கு வந்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை


பட மூலாதாரம், Reuters
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யவுள்ளதாகவும், வாங்க விருப்பம் உள்ளவர்கள் வரும் ஜூலை 4ம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்பவேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தாமிர உருக்கு வளாகம், கந்தக அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் என10 பிரிவுகள் விற்பனைக்கு வருவதாக விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் கேபிடல் என்ற நிறுவனத்தின் மூலம் இந்த விற்பனைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கானவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கூறி 2016ல் தொடர் போராட்டங்களில் பொது மக்கள் ஈடுபட்டனர். 2016 மே மாதம் 22ம் தேதி, ஆயிரக்கணக்கான போராட்டக்கார்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தபோது, காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தினர். அதில் குறைந்தபட்சம் 13 பேர் பலியாகினர். அதன் எதிரொலியாக, தமிழக அரசு அந்த ஆலையை மூட உத்தரவிட்டது.
மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் வழக்குகளை நடத்திவரும் நிலையில், அந்த ஆலையை விற்பனை செய்ய இன்று விளம்பரம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தியின் தெற்கு நோக்கிய அரசியல் பார்வை பலன் தருமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: