அதிமுக ஒற்றைத் தலைமை சர்ச்சை: ‘தி.மு.கவுடன் ஓ.பி.எஸ். தரப்பில் சிலர் நெருக்கம் காட்டினார்கள்’ – கே. பாண்டியராஜன்


  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்

பாண்டியராஜன்

அ.தி.மு.கவில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் ‘தர்மயுத்தம்’ துவங்கி, கட்சி இரண்டாக பிளவுபட்டபோது அவருடன் இருந்தவர் முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன்.

தற்போது கட்சியில் மீண்டும் தலைமை குறித்த பிரச்னை எழுந்திருக்கும் நிலையில், எடப்பாடி கே. பழனிச்சாமியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார் மஃபா கே. பாண்டியராஜன். இதற்குப் பிறகு பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் நேரலையில் பேசினார் அவர். அந்தப் பேட்டியிலிருந்து:

கே. கடந்த சில நாட்களில் அ.தி.மு.கவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?

ப. பொதுக் குழு அறிவித்ததிலிருந்தே தனி ஒரு தலைமை வேண்டுமென்ற கோஷம் வலுவடைந்திருக்கிறது. இதை எதிர்த்து, ஒரு சிறிய குழு இரட்டைத் தலைமையே தொடர வேண்டும் என்கிறார்கள். தொண்டர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள். 75 கட்சி மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் “ஒற்றைத் தலைமை வேண்டும். அது இ.பி.எஸ்சாகத்தான் இருக்க வேண்டும்” என தீர்மானமே நிறைவேற்றப்பட்டுவிட்டது.



Source link

Leave a Reply

Your email address will not be published.