பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: தமிழ்ப் பாடத்தில் 47,000 பேர் தோல்வியடைந்தது ஏன்? – அதிர்ச்சியளிக்கும் பின்னணி


பத்தாம் வகுப்பு

பட மூலாதாரம், AFP

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதில், “பத்தாம் வகுப்புத் தமிழ் மொழிப்பாடத்தில் 47,000 பேர் தேர்ச்சி பெறவில்லை” என்ற விவரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை திங்கள்கிழமையன்று வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குறிப்பாக, மாணவர்களைவிட 9 சதவீதம் அதிகமான மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்ப் பாடத்தைப் பொறுத்தவரையில் திருச்செந்தூரை சேர்ந்த மாணவி துர்கா, 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதேநேரம், பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் 47,000 மாணவர்களும் கணிதப் பாடத்தில் 83,000 மாணவர்களும் தேர்ச்சி பெறவில்லை. பத்தாம் வகுப்பு தமிழ் மொழிப் பாடத்தை எழுதிய 5.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெறாதது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது 2019-ஆம் ஆண்டைவிட சுமார் இரண்டு மடங்கு என நிபுணர்கள் கூறுகிறார்கள்.Source link

Leave a Reply

Your email address will not be published.