மகராாஷ்டிரா சிவசேனை கூட்டணி அரசுக்கு ஆபத்து – 11 எம்எல்ஏக்களுடன் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மாயம்


மகராாஷ்டிரா சிவசேனை கூட்டணி அரசுக்கு ஆபத்து

பட மூலாதாரம், FACEBOOK / EKNATH SHINDE

மகாராஷ்டிர அமைச்சரும், சிவசேனாவின் முக்கிய தலைவருமான ஏக்நாத் ஷிண்டே மற்றும் சில சிவசேனா எம்.எல்.ஏக்களுடன் திடீரெனக் காணாமல் போனதால் அந்த மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

திடீரென மாயமான எம்எல்ஏக்களும் அமைச்சரும் குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் தற்போது சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

இந்தக் கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் பிளவு, நேற்றைய சட்ட மேலவைத் தேர்தலில் வெளிப்படையாகத் தெரிந்தது.Source link

Leave a Reply

Your email address will not be published.