அ.தி.மு.க பொதுக்குழு, ஒற்றைத் தலைமை: ஓ.பி.எஸ்.க்கு உள்ள வாய்ப்புகள் என்னென்ன?


  • ஆ.விஜய் ஆனந்த்
  • பிபிசி தமிழுக்காக

அதிமுக

பட மூலாதாரம், Getty Images

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டன. அ.தி.மு.கவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பது உறுதியாகவிட்டதாக அ.தி.மு.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கான அடுத்தகட்ட வாய்ப்புகள் என்ன?

அ.தி.மு.கவில் அமைப்புரீதியாக உள்ள 75 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் உள்பட கீழ்மட்ட நிர்வாகிகளுக்கான உள்கட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனை பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெறுவதற்காகவும் அப்போது நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்தும் கடந்த 14 ஆம் தேதி அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய வார்த்தைகள், சர்ச்சையை ஏற்படுத்தின.

தொடர்ந்து, ஜெயக்குமாரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. “ஒற்றைத் தலைமை என்பது அம்மாவுக்கு செய்யும் துரோகம். அவர் மட்டுமே நிரந்தரப் பொதுச் செயலாளர்” என்றார் ஓ.பன்னீர்செல்வம். ஆனாலும், ‘பொதுக்குழுவை நடத்தியே தீருவது’ என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உறுதியாக இருந்தனர். அதற்கு முன்னோட்டமாக மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.Source link

Leave a Reply

Your email address will not be published.