தேர்வு தோல்வியால் மாணவர்கள் தற்கொலைக்கு முயல்வதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?


  • பிரசன்னா வெங்கடேஷ்
  • பிபிசி தமிழுக்காக

மாணவர்கள் தற்கொலை

பட மூலாதாரம், AURUMARCUS

தமிழ்நாட்டில், ஒரே நாளில் 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது, மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பிள்ளைகளைப் பறிகொடுத்தப் பெற்றோர் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து கலங்கி இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆவர். தோல்வி அடைந்ததன் விரக்தியே இவர்கள் தற்கொலை செய்துகொள்ளக் காரணமாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் பிரச்னை குறித்தும் கவனம் செலுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுத்தேர்வு முடிவு:

தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 2 நாள்கள் முன்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. தேர்வு முடிவுகளில் 10-ம் வகுப்பில் 90.07 சதவீதம் பேரும், 12-ம் வகுப்பில் 93.76 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.Source link

Leave a Reply

Your email address will not be published.