யஷ்வந்த் சின்ஹா: குடியரசுத் தலைவர் பதவிக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிப்பு


யஷ்வந்த் சின்ஹா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

யஷ்வந்த் சின்ஹா

முன்னாள் பாஜக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் இந்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மமதா பானர்ஜி 22 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பொது வேட்பாளராக போட்டியிட காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் மறுத்து விட்டனர்,

இந்நிலையில், இன்றைய தினம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக” அறிவித்தார்.



Source link

Leave a Reply

Your email address will not be published.