அதிமுக பொதுக்குழு – பன்னீர் செல்வம் பங்கேற்பார்; புதிய தீர்மானங்களுக்கு அனுமதி இல்லை


பட மூலாதாரம், Getty Images
பெரும் பரபரப்புக்கு மத்தியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது இதில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழுவை நடத்த எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வம் சார்பில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை இன்று அதிகாலை நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணைக்கு பின் பொதுக்குழுவை நடத்த எந்த தடையும் இல்லை என்று தெரிவித்தும் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர, புதிய தீர்மானங்களை கொண்டுவரக்கூடாது எனவும் ஆணை பிறப்பித்துள்ளனர்.
இன்னும் சற்று நேரத்தில் பொதுக் குழு கூட்டம்
இன்னும் சற்று நேரத்தில் அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் வானகரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியில் அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.