ஈலோன் மஸ்க்குடன் உறவை முறித்துக் கொண்ட திருநங்கை மகள்


ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம், Getty Images

தன்னுடைய பெயரையும் பாலினத்தையும் மாற்றக்கோரி உலகின் பெரும் பணக்காரர் ஈலோன் மஸ்க்கின் மகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் ஒரு திருநங்கை. மேலும், “தன் தந்தையுடன் இனி எவ்வித உறவையும் பேண விரும்பவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

18 வயதான அவர் தன்னை பெண் ஆக அங்கீகரிக்குமாறும் தன் பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்ற அனுமதி கோரியும் அம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, அவருடைய பெயர் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் ஆக இருந்தது.

பெயர் மாற்றம் மற்றும் புதிய பிறப்பு சான்றிதழ் கோரி அவர் சாண்டா மோனிக்காவில் பகுதியில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் கவுன்டி நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.Source link

Leave a Reply

Your email address will not be published.