தமிழ்நாடு: 95 வயது முதியவரை கட்டிலோடு தூக்கி தெருவில் வைத்துவிட்டு வீட்டை இடித்த அதிகாரிகள்


வெங்கடாசலம் தந்தையை கட்டிலோடு தூக்கும் அதிகாரிகள்.

தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 95 வயது முதியவரை கட்டிலோடு தூக்கி தெருவில் வைத்துவிட்டு அதிகாரிகள் வீட்டை இடித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சீரங்ககவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவருடைய தந்தை 95 வயதான குப்பணகவுண்டர். இவர் குடும்பம் இதே கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஓலைக் குடிசை வீட்டில் வசித்துவந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் வீட்டை புனரமைத்து கட்டிட வீடு கட்டி இருக்கிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிகாரிகள் சுமார் 30 குடும்பத்தினருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளார்கள்.

ஒரே நாளில் 17 வீடுகள் அகற்றம்

நெடுஞ்சாலை துறை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பில் இருக்கக்கூடிய 30 வீடுகளை அதிகாரிகள் அகற்ற இருக்கிறார்கள். தற்போது முதற்கட்டமாக வெங்கடாசலம் வீடு உட்பட 17 வீடுகளை தற்போது அகற்றி இருக்கிறார்கள். அனைவருமே குறிப்பிட்ட இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்தவர்கள். தற்பொழுது ஒரு சிலர் தவிர பெரும்பாலானோர் வீடு இன்றி உறவினர்கள் வீட்டிலும், கோவில்களிலும் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.Source link

Leave a Reply

Your email address will not be published.