மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம்: தொழிலாளர்கள், விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?


  • பிரசன்னா வெங்கடேஷ்
  • பிபிசி தமிழுக்காக

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம்

“மதுரை கூட்டு குடிநீர் திட்டம் நல்லதொரு திட்டம் அல்ல, இத்திட்டத்தால் தேனி மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவும்” என்கிறார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன். ஆனால், இந்த திட்டத்தை அவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

உலக அளவில் தொன்மையான நகரங்களில் முக்கியமானது மதுரை மாநகரம். ‘வைகை நதி’ மதுரைக்கு ஜீவநதியாக அதன் இரு கரைகளையும் பற்றிப் படர்ந்து விரிந்து செல்கிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவைக்கு அடுத்த பெரிய நகரான மதுரை மாநகராட்சியில் இருக்கும் 100 வார்டுகளில் சுமார் 15 லட்சம் மக்கள் (2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) வசிக்கின்றனர்.

நாளொன்றுக்கு 7 கோடி லிட்டர் பற்றாக்குறை

சுமார் 6 லட்சம் குடியிருப்புகளைக் கொண்ட மதுரை மாநகரின் இன்றைய ஒருநாள் குடிநீர்த் தேவை 268 மில்லியன் லிட்டர். ஆனால், தற்போது கிடைப்பதோ 192 மில்லியன் லிட்டர்தான்.Source link

Leave a Reply

Your email address will not be published.