Free Video Downloader

பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பின் பட்டா பெற்ற காணி பழங்குடி


பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பின் பட்டா பெற்ற காணி பழங்குடி

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் பூர்வகுடிகளாக காணி பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பாபநாசம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் காரையாறு அணையை சுற்றி இஞ்சிக்குழி, பெரிய மைலார், சின்ன மைலார், அகத்தியர் காலனி, சேர்வலாறு ஆகிய ஐந்து இடங்களில் காணி பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த ஐந்து பகுதிகளில் 158 குடும்பத்தைச் சேர்ந்த 442 காணி பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.

காணி பழங்குடி மக்களின் பிரதான தொழிலாக இருப்பது விவசாயம், தேன் எடுத்தல், மரவள்ளிக்கிழங்கை பிடுங்கி அதனை வெட்டி காய வைத்து சிப்ஸ் போட்டு விற்பனை செய்வது. இதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

பட்டாவுக்காக பல ஆண்டுகளாக போராடி வந்த பழங்குடி காணி இன மக்களுக்கு வன உரிமை பாதுகாப்புச் சட்டம் 2006-ன் கீழ் மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் காணி பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்க முழு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரால் அதிகாரபூர்வமாக பட்டா வழங்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:



Source link

Leave a Reply

Your email address will not be published.