Free Video Downloader

தமிழிசை சௌந்தரராஜன்: சிதம்பரம் நடராஜர் கோயில் சர்ச்சை தொடர்பாக விளக்கம்


தமிழிசை சௌந்தரராஜன்

பட மூலாதாரம், Facebook/DrTamilisaiGuv

“காலையில் முழுமன நிறைவோடு சிதம்பரம் நடராஜரின் ஆனி திருமஞ்சனம் விழாவில் தரிசனம் செய்துவிட்டு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பொதுநல வேண்டுதலுடன் கோயிலின் வெளியே வந்தால் வழக்கமாக சில வதந்திகளும், புரளிகளும் வருகிறது. அந்த புரளிகளை நான் புரந்தள்ளுகிறேன்,” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம் தேரோட்ட விழாவிற்கு நேற்று காலை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்றிருந்தார். அவர் கோயில் வளாகத்தில் அமர்ந்திருந்த போது தீட்சிதர்கள் வேறு இடத்தில் அமரும்படி கூறி அவமதித்ததாக செய்திகள் பரவின. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழிசை என்னை வேறு இடத்தில் அமரும்படி கூறியது உண்மை தான் ஆனால் அவமதிப்பு செய்யவில்லை என்று விளக்கமளித்தார்.

சிதம்பரம் கோயில் தொடர்பாக ஆளுநரின் விளக்கத்திற்கு பிறகும் அந்த விவகாரம் தமிழிசை சிதம்பரம் கோயில் தீட்சிதர்களால் அவமதிக்கப்பட்டார் என்ற கோணத்தில் சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியது.

இதனிடையே இந்த நிகழ்வு குறித்து தமிழிசை மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “நடராஜரும் நானும், இடையில் நாரதர்கள் வேண்டாம்,” என்று குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.



Source link

Leave a Reply

Your email address will not be published.