Free Video Downloader

சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல்: இந்தியா ஏன் மெளனம் காக்கிறது?


  • தீபக் மண்டல்
  • பிபிசி செய்தியாளர்

சல்மான் ருஷ்டி

பட மூலாதாரம், Reuters

‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ மற்றும் ‘சாத்தானின் வசனங்கள்’ போன்ற நாவல்களை எழுதிய சல்மான் ருஷ்டி கடந்த வாரம் வெள்ளியன்று, அமெரிக்காவில் இலக்கிய நிகழ்வொன்றில் இளைஞர் ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்டார்.

தாக்குதலில் அவரது ஒரு கண் மற்றும் கல்லீரல் சேதமடைந்தது. முதலில் அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார்.ஆனால் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது அவரால் பேச முடிகிறது.

ருஷ்டியின் “சாத்தானின் வசனங்கள்” என்ற புத்தகம் 1988 இல் வெளிவந்தது, அந்த புத்தகம் முகமது நபியை இழிவுபடுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

புத்தகம் வெளியான ஒரு வருடத்திற்குப் பிறகு, 1989 இல், இரானின் உச்ச மதத் தலைவர் அயதுல்லா ருஹோல்லா கமேனி அவரை கொலை செய்ய (ஃபட்வா) உத்தரவிட்டார்.



Source link

Leave a Reply

Your email address will not be published.