Free Video Downloader

மு.க. ஸ்டாலின் நரேந்திர மோதிக்கு அளித்த ‘அந்த’ பெட்டியில் இருந்தது என்ன?


ஸ்டாலின் நரேந்திர மோதி
படக்குறிப்பு,

இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழ் மரபு விதைகள் அடங்கிய பேழையை பரிசாக அளிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தபோது, அவருக்கு தமிழ்நாட்டின் மரபான தானியங்கள் அடங்கிய பெட்டியை பரிசளித்திருக்கிறார். அந்தப் பெட்டிக்குள் என்னென்ன தானியங்கள் இருந்தன? அவற்றின் முக்கியத்துவம் என்ன?

டெல்லிதக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலையில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரையும் மாலையில் பிரதமர் நரேந்திர மோதியையும் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அவற்றின் ஒவ்வொரு விதை குரித்தும் கேட்டறிந்த பிரதமர் அவற்றை பிரதமர் இல்ல வளாக தோட்டத்தில் விதைப்பதாக கூறினார்.

தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி வகைகளும் பலவகை சிறு தானியங்களும் தற்போதும் பயிரிடப்படுகின்றன. இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தானியங்களின் தொகுப்பைத்தான் பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் வழங்கியிருக்கிறார்.



Source link

Leave a Reply

Your email address will not be published.