Free Video Downloader

அமெரிக்காவில் சீன காவல் நிலையங்கள் – கவலையில் எஃப்பிஐ புலனாய்வாளர்கள்


அமெரிக்க புலனாய்வு அமைப்பு

பட மூலாதாரம், Getty Images

சீனாவுடன் தொடர்புடைய ரகசிய “காவல் நிலையங்கள்” அமெரிக்கா முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன என்ற தகவலால் அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கவலை” கொண்டுள்ளது.

Safeguard Defenders என்ற அரசு சாரா அமைப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய ரகசிய நிலையங்கள், நியூயார்க் உட்பட உலகம் முழுவதும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் ரே, இது தொடர்பாக அமெரிக்க மூத்த அரசியல்வாதிகளிடம் பேசும்போது, நாடு முழுவதும் இதுபோன்ற மையங்கள் இருப்பதாக கூறப்பட்டும் சேஃப் டிஃபண்டர்ஸ் அறிக்கையைஎஃப்பிஐ கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

இத்தகைய நிலையங்கள் இருப்பதை நாங்கள் அறிவோம். என்னைப் பொறுத்தவரை, சீன காவல்துறை நியூயார்க்கில் அதன் நிலையங்களை சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் அமைக்க முயற்சிப்பதாக நினைப்பது கூட மூர்க்கத்தனமானது என்று சொல்லலாம். அது இறையாண்மையை மீறுவதுடன் நிலையான நீதி மற்றும் சட்ட அமலாக்க ஒத்துழைப்பு செயல்முறைகளை மீறி நடப்பதாக கருதப்படும்,” என்கிறார் ரே.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *