Free Video Downloader

தலித்திய அறிஞர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிணை – எல்கர் பரிஷத் வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கியது


ஆனந்த் டெல்டும்டே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆனந்த் டெல்டும்டே

பீமா கொரேகான் – எல்கர் பரிஷத் வழக்கில் நீண்டகாலமாக சிறையில் இருந்துவந்த முன்னாள் ஐஐடி பேராசிரியரும் தலித்திய அறிஞருமான ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது பம்பாய் உயர் நீதிமன்றம்.

அவருக்கு எதிரான வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 (சட்ட விரோத செயல்களுக்கான தண்டனை), பிரிவு 16 (பயங்கரவாத செயல்களுக்கு தண்டனை), பிரிவு 18 (சதிச் செயல்களுக்கு தண்டனை) ஆகியவை இந்த வழக்கில் பொருந்தும் என்பதற்கு பூர்வாங்க ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

மகாராஷ்டிராவில் 2017 டிசம்பர் 31 அன்று நடந்த எல்கர் பரிஷத் விழாவில் ஆனந்த் டெல்டும்டே பேசிய கருத்துகள், பீமா கொரேகான் வன்முறைக்கு வித்திட்டதாக கூறும் புனே போலீஸ் 2019 பிப்ரவரியில் அவரை கைது செய்தது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *