Free Video Downloader

இந்திரா காந்தி மதசார்பற்றவரா? என்ன சொல்கிறது வரலாறு?


  • சயீத் நக்வி
  • இதழியலாளர்

இந்திரா காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்திரா காந்தி

(இந்திரா காந்தி பிறந்த நாளுக்காக இந்தக் கட்டுரை மீள்பகிர்வு செய்யப்படுகிறது)

நான் இந்திரா காந்தியைப் பார்ப்பதற்கு முன்பே ஃபிரோஸ் காந்தியை மிகவும் நெருக்கமாக பார்த்துள்ளேன். காரணம், எனது மாமா சயீத் வாசி நக்வியின் ரேபரேலி சட்டமன்றத் தொகுதி அமைத்திருந்த அதே ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக பெரோஸ் இருந்தார்.

நிலக்கிழார்கள் நிறைந்த அவத் பகுதியில், நேரு குடும்பம் பற்றி அதிகம் யாரும் விமர்சிக்க மாட்டார்கள். ஆனால், ஃபிரோஸ் காந்தியின் பூர்விகம் குறித்த முனகல்கள் இருந்துகொண்டே இருக்கும்.

இந்தியாவின் முக்கியமான பிராமணர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி, ஒரு ‘பனியா’ (தொழில் செய்யும் சமூகம்) சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மணக்கலாம். ‘காந்தி’ என்பது பனியா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர் என்று அவர்கள் முடிவு செய்தனர். ஆனால், உண்மையில் பெரோஸின் உண்மையான பெயர் ‘ஃபிரோஸ் ஜெஹாங்கிர் காண்டி’. அவர் பார்சி மதத்தை சேர்ந்தவர். பனியா வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *