Free Video Downloader

உடல்நலம் – ஆஸ்டியோபோரோசிஸ்: ஆண்களைவிட பெண்களை துரத்தும் எலும்பியல் நோய் பற்றி தெரியுமா?


ஆஸ்டியோபோரோசிஸ்

பட மூலாதாரம், Getty Images

இளவயதில் மாதவிடாய் நின்றுபோவதால், இந்தியாவில் இளம்பெண்கள் பலர் எலும்பு மெலிதல் என்று சொல்லப்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்படுவதாகவும், மாறிவரும் வாழ்க்கை சூழல் காரணமாக ஐந்தில் ஒரு பெண், இந்த நோய் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாகவும் சென்னையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அஸ்வின் விஜய் கூறுகிறார்.

மாறிவரும் உணவுப் பழக்கம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து குறைபாடு, உடலுழைப்பு இல்லாததால் ஏற்படும் அதிக உடல்எடை உள்ளிட்ட பலவிதமான காரணங்களால் எலும்பு மெலிதல் நோய்க்கு ஆளாகும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை தருவதாக மருத்துவர் அஸ்வின் விஜய் கூறுகிறார். ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் இந்த நோயால் அதிகம் அவதிப்படுவதாகவும், பெரும்பாலான சமயங்களில் அறிகுறிகள் வெளிப்படையாக தெரியாமல் போவதால், இதற்கான கவனமும் குறைவாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

எலும்பு மெலிதல் நோய் ஏன் அதிகளவில் பெண்களை பாதிக்கிறது என்று கேட்டபோது, ”ஆண்களுக்கு உடலில் டெஸ்ட்ரோஸ்டோன் என்ற ஹார்மோன் சுரக்கிறது. அதேபோல பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் சுரக்கிறது. மாதவிடாய் நின்றுபோனால், இந்த ஹார்மோன் சுரப்பது மிகவும் குறைந்துவிடுகிறது. அதனால், சராசரியாக 48 முதல் 52 வயதில் பெண்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பது பெரும்பாலும் குறைந்துபோகிறது. எலும்புகள் வலுவாக இருப்பதற்கு ஈஸ்ட்ரோஜென் முக்கியம். அதன் சுரப்பு குறைந்துவிடுவதால், ஆண்களை விட, பெண்களுக்கு எலும்பு மெலிதல் அதிகமாக தாக்குகிறது,”என்கிறார் மருத்துவர் விஜய்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *