Free Video Downloader

பிக்பாஸ் ஷிவின்: திருநங்கைகள் மீது புதிய பார்வையை உருவாக்குகிறாரா?


ஷிவின்

பட மூலாதாரம், Shivin/Instagram

பாலினம் என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்கிறார் ஷிவின் கணேசன். பிக்பாஸ் சீசன் 6-இல் கடந்த ஆண்டு நமீதா மாரிமுத்து போலவே இந்த ஆண்டு பங்கேற்றிருப்பவர் ஷிவின்.

அவரது பிக்பாஸ் பங்கேற்பு திருநங்கைகள் உள்ளிட்ட பிற பாலினத்தவர் மீதான புதிய பார்வையையும் விவாதத்தையும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில வாரங்களாக உருவாக்கி இருக்கிறது. 

“உங்களை நீங்கள் ஏற்றுக் கொண்டால் வேறு யாரும் உங்களை அசைக்க முடியாது” என்று தன்னைப் பற்றிய காணொளியில் இவர் கூறுகிறார்.

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 6 வாரங்கள் ஆகும் நிலையில், தொலைக்காட்சி ரசிகர்களின் பரவலான ஆதரவு அவருக்கு இருப்பதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்களும் பெரிய அளவில் வேறுபாடு இல்லாமல் அவரோடு பழகுகிறார்கள்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *