Free Video Downloader

உங்கள் காதலர் நல்லவரா, கெட்டவரா என எப்படி அறிவது? ரிலேஷன்ஷிப் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு?


டாக்சிக் ரிலேஷன்ஷிப்

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிராவை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தா வால்கரை கொலை செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக்கி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளார், ஷ்ரத்தாவின் லிவ்-இன் பார்ட்னர் அஃப்தாப். (திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்துவந்தவர்).

இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல கேள்விகள் எழுகின்றன.

அந்த உறவில் ஷ்ரத்தாவுக்கு நம்பிக்கை இல்லை என்றால், அவரின் காதலர் ஷ்ரத்தாவை உடல் ரீதியாக துன்புறுத்தியிருந்தால், அந்த உறவில் இருந்து அவர் ஏன் வெளியேறவில்லை? அதை அவர் உணரவில்லையா என்பன உள்ளிட்ட கேள்விகளை பலரும் எழுப்புகின்றனர்.

சில சமயங்களில் இருவருக்கும் இடையேயான உறவு முறியும் நிலையில் இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். அஃப்தாப் உடன் தான் பாதுகாப்பாக உணரவில்லை என தன் நண்பர்களிடம் கூறியுள்ளார் ஷ்ரத்தா. ஆனாலும், ஷ்ரத்தா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பலரின் மனதை தொந்தரவு செய்கிறது.

‘டாக்சிக் ரிலேஷன்ஷிப்’ எனப்படும் மனவலியை ஏற்படுத்தக்கூடிய உறவில் இருந்தும் ஏன் அதிலிருந்து ஷ்ரத்தா வெளியேறவில்லை?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *