Free Video Downloader

ஔரங்கசீப் தன் மகனுக்கு இந்தி கற்பிக்க உருவாக்கிய அகராதி


ஔரங்கசீப்

பட மூலாதாரம், INDIA IMAGES

படக்குறிப்பு,

ஔரங்கசீப்பின் குணநலன் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்துவருகிறது.

இந்துக்களை வெறுத்த ஒரு கடுமையான இஸ்லாமிய ஆட்சியாளராக ஔரங்கசீப் பார்க்கப்படுகிறார். ஆனால் ஔரங்கசீப், வரலாற்றின் மிகவும் சிக்கலான ஒரு பாத்திரம். அவருடைய வாழ்க்கையில் மக்களை ஆச்சரியப்படுத்தக்கூடிய பல விஷயங்கள் அடங்கியுள்ளன.

ஔரங்கசீப்பின் சகோதரர் தாரா ஷிகோ, வேதங்களையும் உபநிடதங்களையும் பாரசீக மொழியில் மொழிபெயர்த்த இளவரசராக புகழ் பெற்றவர். 1659 இல் நிகழ்ந்த அதிகாரப் போரில் ஔரங்கசீப் அவரை கொடூரமாகக் கொன்றார்.

இருப்பினும், ஔரங்கசீப் தனது மகனின் கல்விக்காக இந்தி-பாரசீக சொல் அகராதியைத் தயாரிக்கும் பணியைச்செய்தார். அது அவரது ஆளுமையில் பெரிதாக அறியப்படாத அம்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

வரலாற்றாசிரியர் ஓம் பிரகாஷ் பிரசாத்தின் ‘ஒளரங்கசீப், ஏக் நயீ த்ரிஷ்டி’ என்ற புத்தகம், ‘தோஃபத்துல்-ஹிந்த்’ என்ற இந்த ஹிந்துஸ்தானி அகராதி, பாரசீக மொழி தெரிந்த ஒருவர் இந்தி கற்றுக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *