Free Video Downloader

IND VS NZ: 49 பந்தில் சதம் அடித்த சூர்யகுமார் யாதவ் – இந்தியா அசத்தல் வெற்றி


suryakumar yadav

பட மூலாதாரம், Getty Images

இந்தியா – நியூசிலாந்து டி20 கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 51 பந்தில் அடித்த 111 ரன்களின் உதவியோடு இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது. பிறகு ஆடிய நியூசிலாந்து 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. 19வது ஓவரில் பந்து வீசிய இந்திய பௌலர் ஹூடா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து இன்னிங்சை முடித்துவைத்தார்.

ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டியில் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *