Free Video Downloader

இந்தோனீசியா: ஜாவா நிலநடுக்கத்தில் 40 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காயம்


  • எழுதியவர், டெஸ்ஸா வாங், சைமன் ஃப்ரேசர்
  • பதவி, பிபிசி நியூஸ்
நிலநடுக்கம்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

சியாஞ்சூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காயமடைந்த குழந்தைகளை சிகிச்சை முகாமுக்கு அழைத்துச் செல்லும் மீட்புக்குழுவினர்.

இந்தோனீசியாவின் பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகளின்படி, 5.6 என்றவாறு நிலநடுக்கம் பதிவானது. மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகருக்கடியில் 10 கிமீ ஆழத்தில் அது ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தை 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் ஜகார்த்தாவிலும் உணர முடிந்தது. இதன் காரணமாக அங்கு உயரமான கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அங்கு பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் நிலநடுக்கம் மேலும் ஏற்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *