Free Video Downloader

கத்தார் உலக கோப்பை: இரானிய வீரர்கள் தேசிய கீதம் பாடாமல் இருக்க இதுதான் காரணம்


கத்தார் உலக கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அமைதியாக இருந்த இரானிய வீரர்கள்

இரானின் தேசிய கால்பந்து அணியினர் திங்கட்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை போட்டியின் தொடக்கத்துக்கு முன்பாக தங்கள் நாட்டு கீதத்தைப் பாடாமல் அமைதி காத்தனர்.

அவர்களின் செயல்பாடு, தாயகத்தில் காவலில் இருந்த 22 வயது குர்திஷ் சமூக செயல்பாட்டாளர் மாசா அமினியின் மரணத்துக்கு எதிராக போராடி வரும் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

கலீஃபா சர்வதேச மைதானத்தில் சம்பிரதாயத்தின்படி போட்டியிடும் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அணியின் 11 வீரர்கள் அனைவரும் அமைதி காத்தனர். தங்களின் முகத்தை இறுக்கமாகவும் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமலும் அவர்கள் இருந்தனர்.

1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர், இரானிய ஆட்சியாளர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் அங்கு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அதை முன்னெடுத்தவர்களில் ஒருவரான மாசா அமினி என்ற பெண் சமூக செயல்பாட்டாளர் காவலில் இருந்தபோது கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி மரணம் அடைந்தார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *