Free Video Downloader

கத்தார் கால்பந்து உலகக்கோப்பை 2022: கானிம் அல் முஃப்தா – தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர்


கத்தார் உலக கோப்பை

பட மூலாதாரம், Getty Images

கத்தாரில் உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சிகளில் அதிகமாகக் கவனம் பெற்ற ஒன்று நடிகர் மார்கன் ஃப்ரீமேனின் பேச்சு. அத்துடன் குர்ஆன் வசனங்களைக் கூறிய மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரும் கவனம் பெற்றார்.

அவரது பெயர் கானிம் அல் முஃப்தா. கத்தார் உலக கோப்பையின் தூதர் அவர் தான். குர்ஆன் வசனத்தை கூறிய பிறகு அதற்கான ஆங்கில விளக்கத்தையும் கூறி அனைவரையும் வரவேற்றார் கானிம் அல் முஃப்தா.

உலகத்தின் பன்முகத்தன்மை, அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் பண்பு ஆகியவற்றை வலியுறுத்துவதாக மார்கன் ஃப்ரீமன் – கானிம் அல் முஃப்தா ஆகியோருக்கு இடையேயான உரையாடல் அமைந்திருந்தது.

உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் குர்ஆன் வசனங்கள் மூலமாக நிகழ்ச்சிகள் தொடங்கியது இதுவே முதல் முறை என்று வளைகுடா ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *