Free Video Downloader

டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு திகார் சிறையில் மசாஜ்: ஆம் ஆத்மி vs பாஜக அரசியல் மோதல்


சத்யேந்திர ஜெயின்

பட மூலாதாரம், ANI

டெல்லி அரசின் அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான சத்யேந்திர ஜெயினுக்கு திகார் சிறையில் ‘மசாஜ்’ செய்யப்படும் இரண்டு காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.



சத்யேந்திர ஜெயின் பணமோசடி வழக்கில் மே 30ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் (ED) கைது செய்யப்பட்டார்.



திகார் சிறையில் உள்ள சத்யேந்தர ஜெயின் அறையின் சிசிடிவி காட்சிகளில், சத்யேந்திர ஜெயின் படுக்கையில் படுத்துக்கொண்டு சில காகிதங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதையும், ஒரு நபர் அவரது கால்களை பிடித்து மசாஜ் செய்வதையும் தெளிவாகப்பார்க்க முடிகிறது.



சத்யேந்திர ஜெயினை விஐபி போல நடத்தியதற்காக டெல்லி திகார் சிறையின் கண்காணிப்பாளர் இந்த வாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *