Free Video Downloader

தமிழ் சினிமாவின் நீண்டகால வசனகர்த்தா ஆருர்தாஸ் காலமானார்


ஆரூர் தாஸ்
படக்குறிப்பு,

ஆரூர் தாஸ்

தமிழ் திரையுலகில் நீண்டகாலம் வசனகர்த்தாவாக பணிபுரிந்த ஆரூர்தாஸ் வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

தமிழ்த் திரையுலகில் வசனகர்த்தாக்களுக்கு பெரும் மரியாதை இருந்த காலகட்டத்தில் திரையுலகில் அடியெடுத்துவைத்த ஆரூர்தாஸ், சுமார் 1000 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

ஆரூர்தாஸின் சொந்த ஊர் திருவாரூர். 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி சந்தியாகு – ஆரோக்கிய மேரி தம்பதிக்குப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் யேசுதாஸ். இவர் தனது ஆரம்ப ஆண்டுகளை பவித்திர மாணிக்கம் என்ற சிற்றூரில் கழித்தார்.

திருவாரூரில் பள்ளிப் படிப்பை முடித்த நிலையில், மு. கருணாநிதி எழுதிய, சாந்தா அல்லது பழனியப்பன், தூக்கு மேடை, மந்திரி குமாரி ஆகிய நாடகங்களைப் பார்த்து தானும் அதுபோல எழுத வேண்டுமென ஆசைப்பட்டார். நண்பர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு ஜென்ம தண்டனை என்ற நாடகத்தை எழுதினார். அதற்குப் பிறகு திரிசூலம் என்ற நாடகத்தை எழுதினார்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *