Free Video Downloader

பிக் – பாஸ் 6: ஞாயிற்றுக் கிழமையும் அஸீம் மீதே தாக்குதல்; அமுதவாணன் அப்சட்


பிக் பாஸ்

பட மூலாதாரம், Vijay TV/Twitter

“சமநிலை தவறாமல் இருப்பதுதான் முக்கியம். வீட்டில் சிலர் அடுத்தவர்களின் சமநிலையைத் தவற வைப்பதே வேலையாக இருக்கிறார்கள்” என்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடை பஞ்சாயத்துடன் ஆரம்பித்தார் கமல்.

போட்டியாளர்களுடன் பேச ஆரம்பித்ததும், சின்ன டாஸ்க் ஒன்றை அறிவித்தார் கமல். அதாவது, தனக்குத் தகுதியான போட்டியாளருக்கு வாளையும் மிகச் சாதாரணமான ஒருவருக்கு அட்டைக் கத்தியையும் கொடுக்க வேண்டும் என்றார் கமல். இந்த டாஸ்க்கிலும் வழக்கம்போல பலரும் தத்தம் சொந்தக் கணக்கைத் தீர்த்துக்கொண்டார்கள்.

ஷிவினுக்கு அதிக கத்திகளும் அஸீமுக்கு அதிக அளவில் அட்டைக் கத்திகளும் கிடைத்தன. தனக்குக் கிடைத்த அட்டைக் கத்திகளை அஸீம் எண்ணிக்கொண்டிருந்ததைப்  பார்த்தபோது பரிதாபமாகத்தான் இருந்தது.

பக்கத்திலிருந்த முத்துவிடம், “பல பேருக்கு கேள்வியே புரியலை” என்று பேசி சமாளித்துக் கொண்டிருந்தார் அஸீம்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *