Free Video Downloader

விஜய் ஹசாரே கோப்பைத் தொடர்: உலக சாதனை படைத்துள்ள தமிழ்நாடு அணி


NARAYAN JEGADEESAN/INSTAGRAM

பட மூலாதாரம், NARAYAN JEGADEESAN/INSTAGRAM

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் தமிழ்நாடு அணியும்  ஒரு மாபெரும் மைல்கல்லை எட்டி உலக சாதனையை படைத்திருக்கிறது.  

 என்ன நடந்தது? 

 இந்தியாவில் 50 ஓவர்களை கொண்ட விஜய் ஹசாரே கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேச அணிகள் மோதியதில் தமிழ்நாடு அணி அருணாச்சல பிரதேச அணியை 435 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் பல்வேறு உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளதாக  இஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ கூறுகிறது. 

 இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 50 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 506 ரன்கள் எடுத்தது. 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *