Free Video Downloader

கத்தார்- எக்வடோர் கால்பந்து உலகக் கோப்பை 2022: கொடுங்கனவாக மாறிய 12 ஆண்டு காலக் காத்திருப்பு


கத்தார்

பட மூலாதாரம், Getty Images

சுமார் 20 லட்சம் கோடி ரூபாயைச் செலவு செய்து கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் கத்தாரின் 12 ஆண்டு காலக் காத்திருப்பும், பெருங்கனவும் மிக மோசமாகச் சிதைந்திருக்கிறது.

முதல் போட்டியிலேயே மோசமான தோல்வி கிடைத்திருப்பது அந்நாட்டு ரசிகர்களை அதிருப்தியடைச் செய்திருக்கிறது என்பதை காலியான மைதான இருக்கைகளே வெளிப்படுத்தின.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் போட்டியை நடத்தும் நாடு தனது முதல் ஆட்டத்தில் தோல்வியடைவது இதுவே முதல்முறை. இதற்கு முன் 2010-ஆம் ஆண்டு போட்டியை நடத்திய தென் ஆப்பிரிக்கா அணி, முதல் போட்டியில் வென்றாலும், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. அதுவே போட்டியை நடத்தும் நாட்டுக்கு ஏற்பட்ட மோசமான தோல்வியாக இருந்தது. 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் இடம்பெற்றிருக்கும்  ஏ பிரிவில் ஒப்பீட்டளவில் குறைந்த வலிமையுள்ள அணியாகக் கருதப்படும் எக்வடோருக்கு நிகராகக் கூட கத்தாரால் ஆடமுடியவில்லை என்றால் அடுத்துவரும் இரு போட்டிகளிலும் இன்னும் மோசமான தோல்விகளைச் சந்திக்கக்கூடும் என்ற விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *