Free Video Downloader

காயத்ரி ரகுராம்: “என் தரப்பை கேட்காமலேயே நீக்கினார்கள்” – என்ன பின்னணி?


தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி
படக்குறிப்பு,

காயத்ரி ரகுராம்

என் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் இடைநீக்கம் செய்துவிட்டார்கள் என்றும் செல்வக்குமார் என்ற அறிவுசார் பிரிவின் துணைத் தலைவர் தன்னைக் குறிவைத்து செயல்படுவதாகவும் காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியிருக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காயத்ரி ரகுராம், தான் கட்சிக்குக் களங்கம் எனக் கூறியிருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினார்.

“தனிப்பட்ட முறையில் யார் என்னைத் தாக்கினாலும் அவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன். இது என் உரிமை. கருத்துரிமையை முடக்குவது வருத்தமாக இருக்கிறது. அதற்காக என்னை இடை நீக்கம் செய்திருப்பது, அதுவும் கட்சிக்குக் களங்கம் என்று கூறியிருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

எட்டு வருடமாக என் உழைப்பை கட்சிக்கு கொடுத்திருக்கிறேன். அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவுக்கு தலைவராக இருந்த நிலையில், 24 தமிழர்களை வெளிநாட்டிலிருந்து மீட்டிருக்கிறேன். அப்படியிருக்கும்போது பா.ஜ.கவுக்கு நான் களங்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறுவது வருத்தமளிக்கிறது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *